தமிழ் சொட்டும் கவிதைகள்!

உலகெங்கிலும் உள்ள தமிழ்ப் பிரியர்களின் இலக்கிய சுவைக் கூட்ட,

தமிழரின் குரல் வளையாக கவிதை.காம் 10 ஆண்டுகளுக்கு மேலாக சேவை செய்து வருகிறது!

உலகெங்கும் தமிழ் குரல் ஒலிக்கட்டும்!

இன்றையக் கவிதை

சாதிகள் வேணுமடி பாப்பா!

ருத்ரா

எல ஒரு சாமிய கும்பிட்டா!
கும்பிட்ட மாரியா இருக்கும்?....இப்டி!
பூட‌ம் தெரியாமெ சாமியாடிட்டே இருக்க‌ணும்.!
யோக்ய‌ங்க‌ண‌க்கா பேசாதலெ!
பொற‌ந்தாக்ல‌ அந்த‌குறிய‌ கூட‌ பாக்காம‌!
என‌த்தான் ச‌ன‌த்தான்னு குறி பாத்து!
த‌ஸ்தாவேஜி போடுதாம்லா!
அதப்பாருலெ!
அதுக்கு நாம‌ என்னெழ‌வ்லே செய்ய‌து.!
க‌வ‌ர்மெண்டே குத்ர‌ ப‌ச்ச‌டே இது.!
எத்த‌ன‌ ப‌ய‌லுவ‌ அப்டி!
எத்த‌ன‌ ப‌ய‌லுவ‌ இப்டி!
எலே நாளக்கி ஓட்டு வேணும்லாலே!
துட்டு எடுக்க‌ணும்னா ஓட்டு வேணும்லே!
ஓட்டு வேணும்னா சாதி வேணும்லே.!
அவ்வொ வ‌ந்தாவ‌ இவ்வோ வ‌ந்தாவ‌!
எல‌ எவ்வொ வ‌ந்தாலும்!
சாதியும் வ‌ரும்லெ.!
சாதி இரண்டொழிய வேறில்லைன்னு!
சொல்லியிருக்காவ்ளே...!
!
அந்தாக்லெ பொடதிலெ ரெண்டு வச்சேண்ணா!
எல உனக்கும் எனக்குமாலெ அது.!
ஆங்க்...!
அங்ஙன வச்சு ஒரு மீட்டிங்லெ!
ஒருத்தன் சொன்னாம்லே அர்த்த‌ம்!
ஒண்ணு வாங்க்ர‌ சாதி!
ஒண்ணு குடுக்குர‌ சாதி.!
அவ்வ‌யா சொன்ன‌த‌!
அவ‌னுவ‌ளும் இப்டிதாம்ல‌ சொன்னாங்க‌.!
ஆபீசுக‌ள்ள‌ போயி பாருன்னாங்க‌.!
அப்றம்.!
அப்ற‌ம் என்னால‌ அப்ற‌ம்.!
அப்ற‌ம் வீட்டுக்கு வ‌ரும் போங்க்லென்டாங்க‌..!
எல‌ மூதி மூதி.!
இங்க‌ என்ன‌லெ ப‌ண்ணுதெ!
அங்கெ க‌ள‌னி நாறிட்டு ருக்கு.!
சாணிய‌ போட்டுட்டு!
க‌ளினிய்ய‌ தூக்கிட்டுப்போல‌!
கூறுகெட்ட‌ மூதி.!
ஒண்ணு நாறுதுண்ணு!
இன்னொரு நாத்த‌த்த‌!
ப‌ரிமாத்த‌ம் ப‌ண்ணிக்கிருது தான்!
ந‌ம்ம‌ தேச‌த்து ப‌ழ‌க்க‌ம்!
சாதியும் சாமியும் அப்ப‌டித்தாம்லெ!
த்ருனெலிக்கார‌ங்க‌ ரெண்டுபேரு!
பேசிகிட்ட‌!
ந‌ம்ம‌ அர‌சிய‌ சாச‌ன‌ம் இதான்.!

சமீபத்திய கவிதை

வியர்வை சுமக்கும் பனிக்கட்டிகள்

புதியமாதவி, மும்பை

இன் இனிய உறவுகளே!
முகவரி மட்டுமே அறிந்த!
உங்கள் முகங்களை !
குளிரூட்டும் அந்த இரவில்!
சந்தித்த அந்த நிமிடங்கள்!
மிகவும் இனிமையானவை.!
கோடைமழையைப் போல!
என்னைக் குளிர்வித்த!
தருணங்களை!
பனிப்பிரதேசத்தில்!
நெருப்பு அடுப்புகளில்!
குளிர்க்காயும்!
உங்களிடம்!
எப்படி புரியவைப்பேன்.?!
உங்களைச் சந்தித்த நிமிடங்கள்!
காதலின் இனிமையை, தழுவலை!
இரண்டாம் நிலைக்கு!
தள்ளிவிட்ட அற்புதத்தை!
என்னவென்று சொல்லட்டும்?!
*!
வெட்ப பிரதேசத்தின்!
வியர்வைகளை விடக் கொடியது!
குளிரில் !
கம்பளிப்பூச்சிகளுடன்!
குடும்பம் நடத்துவது.!
எப்போதும் !
எதற்குள்ளாவது!
நம்மை, நம் உடலை!
போர்த்திக்கொண்டு!
திரியும் அவலம்!
நிரிவாணத்தைவிடக் கொடியது.!
உங்கள் புன்னகைகளை மட்டுமல்ல!
உங்கள் புன்னகைக்குள்!
மறைந்து கிடந்த!
உறைந்த பனிக்கட்டிகளையும்!
அப்படியே சுமந்து !
கொண்டு வந்திருக்கிறேன்!
என் வியர்வைத் துளிகளில்.!
*!
என் தொட்டிச்செடிகளைப்!
பார்க்கும் போதெல்லாம்!
உங்கள் மழலைகளின் முகங்கள்.!
அதனால்தான்!
இப்போதெல்லாம் !
செடிகளின் இலைகள்!
பழுத்து உதிர்ந்துவிட்டால் கூட!
பதறுகிறது நெஞ்சம்.!
பார்த்து பார்த்து!
வளர்க்கிறேன்.!
நாளைப் பூக்கும்!
பூங்கொத்துகள்!
நான் அவர்களுக்கு!
அனுப்பும் வெறும் மலர்க்கொத்துகள்!
மட்டுமல்ல.!
ஆல்ப்ஸ் மலையின்!
பனிக்கட்டியில்!
நீர்த்துப் போகாமல்!
நெருப்பு மலர்களாய்!
நீங்கள் வாழ்ந்ததின் சாட்சியாய்!
தலைமறைத் தலைமுறையாய்!
அனுப்பிக்கொண்டிருப்பேன்.!
என் தொட்டிச்செடிகளின்!
வேர்களில் !
ஒட்டிக்கொண்டிருக்கும்!
நமக்கான நம் மண்ணின்!
அடையாளம் இருக்கும்வரை.!
*!
எழுத்தும் !
எழுத்து சார்ந்த என் கலகக்குரலும்!
என்ன சாதித்துவிட்டது?!
என்னைப் புரிந்து கொள்ளாத!
மனிதர்களுக்கு நடுவில்!
காயங்களுடனேயே!
சுமந்து கொண்டு திரிகிறேன்!
எனக்கான என் எழுத்துகளை.!
மயில்களே இல்லாத!
மலைவாசத்தளத்தில்!
எங்கிருந்து சேர்த்துவைத்திருக்கிறீர்கள்!
என்னையும் என் எழுத்துகளையும்!
நேசிக்கும்!
உங்கள் மயிலிறகுகளை?

குறிப்பில்லாக் கவிதை (random)

காதல்

சலோப்ரியன்

 
ஆதாம் எங்கேயோ
ஆறடிக்குள் புதைந்து விட்டான்
ஆனால்
அவன் விட்டுச் சென்ற காதலோ
பூமியெங்கும் பூத்துக் கிடக்கிறது!!!