Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

நான் யோகா செய்தது கிடையாது, ஏனென்றால் என் பெற்றோருக்கு அது பற்றிய புரிதல் இல்லாமல் இருந்தது.

என் குழந்தைக்கு 'ஜெய் அனுமன்' தெரியும்.. சூப்பர் மேன் பற்றி தெரியாது!

நான் யோகா செய்தது கிடையாது, ஏனென்றால் என் பெற்றோருக்கு அது பற்றிய புரிதல் இல்லாமல் இருந்தது. தெரிந்திருந்தால் நானும் உடலை கட்டுப்பாடோடு வைத்திருந்திருப்பேன் என நடிகை நமிதா தெரிவித்தார்.

11 வது சர்வதேச யோகா தினத்தையொட்டி வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் உள்ள தனியார் கல்லூரியில் யோகா நிகழ்ச்சி இன்று (ஜூன்.21) நடைபெற்றது. இதில் தெலங்கானா முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் சிறப்பு அழைப்பாளராக நடிகை நமீதா ஆகியோர் பங்கேற்றனர். இதில் பள்ளி மாணவ, மாணவிகள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு யோகா பயிற்சி செய்தனர். சிறப்பாக யோகா செய்தவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது.

பின்னர் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில், ''உலகம் முழுவதும் 170 நாடுகளில் இன்று யோகா நாள் கொண்டாட பிரதமரே காரணம். அவருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். யோகா செய்தால் மகிழ்ச்சி உண்டாகும், வாழ்க்கை மேம்படும். அது போல டிசம்பர் 21 தியான தினமாக கொண்டாட வேண்டும் என பிரதமர் மோடி கூறியுள்ளார். அதன் நோக்கம் நாம் அனைவரும் உடல் நலத்தோடு இருக்க வேண்டும் என்பது தான்'' என அவர் கூறினார்.

தாய்மொழி தான் முக்கியம்

அதனை தொடர்ந்து பேசிய நடிகை நமீதா, ''யோகா 5 ஆயிரம் வருட பாரம்பரியம் கொண்டது. 2007-ல் பாலிவுட் நடிகை கரீனா கபூர் யோகா மூலம் உடலை கட்டுப்பாடோடு வைத்த பின் தான் எங்கள் பல பேருக்கு யோகா பற்றி தெரிய வந்தது. கடந்த 10 ஆண்டாகத் தான் யோகா பிரபலமாகி வருகிறது. ஆங்கிலம் தெரிந்திருப்பது நல்லது தான். ஆனால், அதற்கு முன் கண்டிப்பாக தாய்மொழி தான் முக்கியம். என் குழந்தைகளுக்கு தமிழ், தெலுங்கு, குஜராத்தி தெரியும். ஏனென்றால் அது அவர்கள் தாய்மொழி.

பெற்றோருக்கு புரிதல் இல்லை

என் குழந்தைக்கு ஸ்பைடர் மேன், சூப்பர் மேன் பற்றி தெரியாது, ஆனால் நிச்சயமாக 'ஜெய் அனுமன்' தெரியும். என் குழந்தைகளுக்கு அனுமன் என்றால் மிகவும் இஷ்டம், இதை நான் பெருமையாக தெரிவித்துக் கொள்கிறேன். என் குழந்தைகளுக்கு நான் யோகா, சிலம்பம் உள்ளிட்டவற்றை கற்றுக் கொடுக்கிறேன். 

நான் யோகா செய்தது கிடையாது, ஏனென்றால் என் பெற்றோருக்கு அது பற்றின புரிதல் இல்லாமல் இருந்தது. தெரிந்திருந்தால் நானும் உடலை கட்டுப்பாடோடு வைத்திருந்திருப்பேன். என் குழந்தைகளோடு நான் வீட்டில் ஆங்கிலத்தில் பேசுவது இல்லை. என் தாய் மொழியில் தான் பேசுகிறேன்'' என தெரிவித்தார்.