Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

தேசிய மக்கள் சக்தியுடனான விவாதங்களுக்கு ஐக்கிய மக்கள் சக்தி தயாராக இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

ஜேவிபியின் சவாலுக்கு நாங்கள் தயார்: சஜித் தரப்பு.

ஜேவிபியின் சவாலுக்கு நாங்கள்  தயார்: சஜித் தரப்பு

மே மாதத்தில் தேசிய மக்கள் சக்தியுடனான விவாதங்களுக்கு ஐக்கிய மக்கள் சக்தி தயாராக இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

அம்பாந்தோட்டை, வீரகெட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“கடிதம் எழுத வேண்டிய தேவையில்லை. மே மாதம் இரண்டு விவாதங்களுக்கும் நாங்கள் தயார்.

நளின் பண்டார பொருளாதாரத் துறையில் விவாதத்திற்கு வருமாறு சகோதரர்களுக்கு சவால் விடுத்த போது, பொருளாதார நிபுணர்களின் விவாதத்தில் இருந்து தப்பிய சகோதரர்கள் மீண்டும் தலைவர்களுக்கு இடையில் விவாதத்திற்கு வருமாறு சவால் விடுத்தனர்.

பொருளாதார வல்லுநர்கள் மற்றும் தலைவர்களுக்கு இடையிலான இரண்டு விவாதங்களுக்கும் நாம் தயார்.

இதிலிருந்து தப்பி ஓடாமல், இந்த இரண்டு சவால்களையும் ஏற்றுக்கொள்ளுமாறும், கோழைகளாக தப்பித்து ஓடாது, விவாதத்திற்கு வருமாறும் அழைப்பு விடுக்கின்றோம்.

பொருளாதார வல்லுநர்கள் மத்தியிலான விவாதத்திற்கு முடியாது என கூறுவது அவர்களின் பொருளாதார வல்லுனர்களால் நாட்டுக்கான சரியான பொருளாதார பார்வையை முன்வைக்க முடியாமையினாலா என்ற பிரச்சினை எழுகிறது.

எனவே, கடிதம் அனுப்பாமல் மே மாதம் இரு விவாதங்களுக்கும் வாருங்கள். அதே போல் விவாதங்கள் நடத்துவது போலவே, வெறும் வாய்வீராப்பு காட்டாமல் மக்களுக்கு சேவை செய்து காட்டுங்கள்.

பிரயோக ரீதியான தலைவர்களே நாட்டிற்குத் தேவை. வீராப்பு பேச்சுக்களால், பொய்களால் மக்கள் சலிப்படைந்துள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தி பேச்சுக்கும், மக்கள் பணிக்கும் தயாராக இருப்பதால், அஞ்சாது விவாதத்திற்கு வருமாறு கோரிக்கை விடுக்கின்றோம்” என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்துள்ளார்.